‘யாரு, நம்ம பாண்டியம்மாவா இது?’ - புதிய தோற்றத்தில் ‘பிகில்’ இந்திரஜா சங்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘பிகில்’ பாண்டியம்மா அவரது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ஸ்டைலுக்கு மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


Advertisement

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஜயின் திரைப்படம் ‘பிகில்’. இதில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். வியாபார ரீதியாக இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டை நடத்தியது.

image


Advertisement

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ராயப்பன் பாத்திரம் அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. ஆகவே அந்தக் கதாபாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்கும்படி ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அட்லியிடம் கேரிக்கை வைத்திருந்தார். அதற்கு அட்லியும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் பெண்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதில், பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்திருந்த இந்திரஜா சங்கர் அதிக கவனித்தை ஈர்த்திருந்தார்.

‘வில்லன்’ கெட் அப்பில் ‘வலிமை’ அஜித் - ரசிகர்கள் புதிய உற்சாகம்

இந்நிலையில், இந்திரஜா சங்கர் தான் எடுத்து கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் முற்றிலும் அடையாளமே தெரியாத அளவுக்கு புதிய தோற்றதில் தென்படுகிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் புதிய தோற்றத்தினை ஆடை வடிவமைப்பாளர் சத்யா அவருக்கு ஏற்படுத்தி தந்ததாக தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இந்திரஜா எழுதியுள்ள பதிவில், “இதைச் செய்யுங்கள்; அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குங்கள்!! சத்யா அண்ணாவை நம்பி நான் இதை செய்தேன். மேலும், ஒட்டுமொத்த குழுவே என்னை நம்பியது. ஒட்டுமொத்த குழுவும் வேலைப் பார்த்து மிக அழகான புதிய தோற்றத்தை கொண்டுவந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள்தான் இந்திரஜா சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement