திருட வந்த இடத்தில் மனம் திருந்தி மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு திருடன் ஒரே நாளில் ஆறு இடங்களில் திருட முடிவு செய்து திருடியிருக்கிறான். அப்பகுதியில் இருந்த டயர் நிறுவனம் உட்பட ஐந்து இடங்களில் தனது கைவரிசையைக் காட்டிய அவன், ஆறாவதாக திருவாங்குளம் என்ற இடத்திலிருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்திருக்கிறான்.


Advertisement

வீட்டை உடைத்து உள்ளே சென்ற பிறகே, அது முன்னாள் ராணுவவீரர் ஒருவரின் வீடு என தெரிய வந்திருக்கிறது. ஐசக் மணி என்ற இராணுவ வீரரின் வீடு தான் அது என தெரியவரவே மனம் திருந்திய திருடன்., ஒரு ராணுவ வீரன் வீட்டிலா திருடுவது என வருந்தி இருக்கிறான். பிறகு அந்த வீட்டில் இருந்த மிலிட்டரி சரக்கை ஒரு கிளாஸில் ஊற்றிக் குடித்து விட்டு மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டுப் போயிருக்கிறான்.

image


Advertisement

அக்கடிதத்தில், ‘இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் வந்து விட்டேன்., முன்னரே தெரிந்திருந்தால் பூட்டை கூட உடைத்திருக்க மாட்டேன்’ எனக் கூறியிருக்கிறான். மேலும் அக்கடிதத்தில், ‘பைபில் வாசகமொன்றை குறிப்பிட்டு - திருடுவது தவறு’ என்றும் எழுதியிருக்கிறான். இராணுவ வீரரின் வீட்டுப் பூட்டை உடைப்பதற்கு முன் அவன் திருடிய ஒரு பை’யினையும் வீரரின் வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்கிறான். அதிலிருக்கும் பத்தாயிரம் ரூபாயினை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என காவல்துறைக்கு அவன் வேண்டுகோள் விடுத்துள்ளான்.

இந்நிலையில், வெளியூர் சென்றிருந்த இராணுவ வீரரின் குடும்பத்தார் ஊர் திரும்பியதும் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். பிறகு, காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரனை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய எர்ணாகுளம் காவல் துறையினர், ‘திருடனின் இச்செயல் சந்தேகத்தை உருவாக்குகிறது, அவன் காவல் துறையை திசை திருப்பவே இப்படி செய்திருக்கலாம் எனவே விசாரணை தொடரும்’ என அறிவித்திருகிறார்கள்.

loading...
Related Tags : apologyKeralaThief

Advertisement

Advertisement

Advertisement