[X] Close >

தோட்டாக்கள் தெறிக்கும் "கேங்ஸ்டர்" படம் ! கெத்து காட்டும் "ஜகமே தந்திரம்"

Dhanush-next-film-titled-as-Jagame-Thanthiram

அசுரனின் அசுரத்தனமான வெற்றி தனுஷ் என்ற நடிகனை தமிழ் சினிமாவுக்கு மகாநடிகன் உருவத்தை கொடுத்தது. ஆனால், அடுத்தடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "என்னை நோக்கி பாயும் தோட்டாவும்", துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான "பட்டாஸ்" திரைப்படமும் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.


Advertisement

image

வடசென்னை, அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தை இயக்கிய பிறகு தனுஷுடன் இணைந்திருக்கிறார் கார்திக் சுப்புராஜ். இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் டி40 என்ற பெயரிலே வழங்கப்பட்டு வந்தன. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


Advertisement

image

நீண்ட நாட்களாக இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பல்வேறு பேட்டிகளில் லண்டன் நடந்த படப்பிடிப்புகள் குறித்து, ஹாலிவுட் நடிகர்களை தேர்வு செய்த விதம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார். அவரது அந்த பேட்டிகள் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் எகிர வைத்தது.

image


Advertisement

நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் நேற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதாவது, பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 5 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதுதான் அந்த அறிவிப்பு. தனுஷ் வேட்டி சட்டையுடன் கையில் அறிவாள் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அந்த அறிவிப்பை வெளியிட்டார். லண்டன் மாநகரின் முக்கியமான இடங்களின் படங்கள் அந்த போஸ்டரில் இருந்தது. அட்டகாசமாக இருந்த அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

தனுஷ் கொடுத்த அன்புப்பரிசில் நெகிழ்ந்து போன யோகிபாபு 

image

அஜித் விஜய் படங்களை அடுத்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருப்பது தனுஷின் பட அப்டேட்டுகளுக்காகத் தான் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்ததால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

image

அறிவிக்கப்பட்ட படியே, படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டருக்குள்ளே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரை தாண்டி மேலும் படம் குறித்த இரண்டு அப்டேட்கள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதாவது, படத்தின் பெயரும், ரிலீஸ் தேதியும் மோஷன் போஸ்டரும் உடன் வெளியாகியுள்ளது.

image

படத்திற்கு "ஜகமே தந்திரம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம் என்ற வார்த்தை ரஜினி - கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல் ஒன்றில் வந்து பிரபலமான வரியாகும். ரஜினி பாடலில் இருந்து வார்த்தையை தேர்வு செய்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

முக்கியமாக மோஷன் போஸ்டரை பொறுத்தவரை மிகவும் அட்டகாசமாக வடிவமைத்துள்ளார்கள். பேட்ட படத்திற்கு அனிருத் இசையில் வெளியான மோஷன் போஸ்டர் பெரிய ஹிட் அடித்தது. அதே போல சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் தனுஷின் ஜகமே தந்திரம் மோஷன் போஸ்டரும் பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ‘டி43’ படத்தில் இணையும் பிரசன்னா ? 

இப்படத்தில் வரும் தனுஷின் கதாப்பாத்திரத்தின் தோற்றம் அவர் மீண்டும் டானாக நடிக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. தனுஷ்க்கு எப்போதும் டான் கதாப்பாத்திரம் கச்சிதமாக பொருந்தும். இதனை "புதுப்பேட்டை" படத்திலேயே மிகவும் பிரமாதமாக செய்திருப்பார். மேலும், தமிழ் சினிமா வரலாற்றில் புதுப்பேட்டைக்கும், தனுஷ் நடித்த கொக்கி குமார் கதாப்பாத்திரத்துக்கும் எப்போதும் இடமுண்டு.

image

அதேபோல கார்த்திக் சுப்புராஜ் "ஜிகர்தண்டாவில்" பாபி சிம்ஹாவை வைக்து டான் கேரக்டரை வேறுவிதமாக கொடுத்திருப்பார். ஜிகர்தண்டாவில் நடிப்பில் அசத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல கார்த்திக் சுப்புராஜ் படங்களில் கடைசி நேரத்தில் வரும் ட்விஸ்ட் பெரும் சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். அதேபோல ஜகமே தந்திரம் படமும் யாரும் யூகிக்க முடியாத வகையில் இருக்கும் என்று மோஷன் போஸ்டரை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம்.

image

மோஷன் போஸ்டரில் முக்கியமான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு அறையில் உள்ள மிகப்பெரிய டேபிளில் தனுஷ் கெத்தாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஒரு ஹாலிவுட் நடிகர்களும், மறுபுறத்தில் இளவரசன் உள்ளிட்ட தமிழ், மலையாள நடிகர்களும் இருக்கிறார்கள். டேபிள் முழுவதும் பிரியாணி, மது வகைகள் இருக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் ஏசுநாதரின் "லாஸ்ட் சப்பர்" புகைப்படம் போல இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தக் காட்சி ஒரு கேங்ஸ்டர் படத்திற்கு உண்டான வகையில் அசத்தலாக உள்ளது. அத்துடன், சிதறிகிடக்கும் தோட்டாக்களுக்கு நடுவே தனுஷ் நடந்து வருகிறார். அடுத்ததாக வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் முதுகில் மிஷின் துப்பாக்கியை மாட்டிக் கொண்டவாறு, தனது இரு கைகளிலும் துப்பாக்கியுடன் இருக்கிறார். ஒட்டு மொத்தமாக மோஷன் போஸ்டர் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்தான்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close