[X] Close >

“மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைப்பதை உண்டால் நாயாக பிறப்பீர்கள்” குஜராத் சாமியார் பேச்சு

Menstruating-women-cooking-for-hubbies-will-be-born-as-dogs----

பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஒரு சித்திரத்தை வரைந்து வைத்து அதற்கு உயிரூட்ட சமூகம் முயன்று கொண்டே இருக்கின்றது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டின் புழக்கடையில் தான் தங்கவேண்டும்., மாதவிடாய் காலத்தில் வழிபாட்டுத் தளங்களுக்கு செல்லக் கூடாது என சிலர் பெண்கள் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை திணித்த படியே தான் இருக்கின்றனர்.


Advertisement

இந்நிலையில், மாதவிடாய் தொடர்பாக சாமியார் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். குஜராத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் பெண்கள் மாதவிடாய் காலத்தில் உணவு சமைத்துக் கொடுத்தால் அதனை கணவர்கள் உண்ணக் கூடாது. அப்படிச் செய்தால் மறு ஜென்மத்தில் அப்பெண்கள் நாயாகவும் அவர்களின் கணவர்கள் எருதாகவும் பிறப்பார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

image


Advertisement

குஜராத்தைச் சேர்ந்த மதகுரு குருனாஸ்வரூப் தாஸ்ஜி. இவர் தோன்றும் ஒரு காணொளியில் இக்கருத்தை பேசியிருக்கிறார்., மேலும் அந்த வீடியோவில் நீங்கள் என் கருத்தை நம்பினாலும் நம்பாமல் போனாலும், விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் எனக்கு கவலையில்லை. நான் கூறுவது எல்லாம் சாஸ்திரத்தில் உள்ளவை தான் என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட், குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இயங்கிவருகிறது. சுவாமி நாராயண் ட்ரஸ்ட் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வரும் இக்கல்வி நிலையத்தில் விநோதமான பழக்கம் ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவிகள் தங்கள் மாதவிடாய் காலத்தில், சக மாணவிகளை தொடக் கூடாது, அவர்கள் அருகில் உட்காரக் கூடாது என சில கட்டுப்பாடுகள் உள்ளன. இக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த கோயிலில் மாதவிடாய் காலத்திலிருந்த சில பெண்கள் சமீபத்தில் உள்ளே நுழைந்ததாக சந்தேகம் எழவே நிர்வாகம் அங்கு பயின்ற எல்லா மாணவிகளையும் ஒவ்வொருவராக கழிப்பறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளது.

image


Advertisement

பிறகு இச்சம்பவம் தொடர்பான புகாரில் தேசிய மகளிர் ஆணையம் தலையிடவே அக்கல்லூரியின் முதல்வர் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இப்படியொரு சம்பவம் நடந்தேறி சில நாட்கள் கூட ஆகாத நிலையில் சாமியாரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Related Tags : Menstruating womengujarat
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close