JUST IN

“ராணுவத்தில் பெண்கள் கமா‌ண்டர்களாக பணியாற்றலாம்” - உச்சநீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய ராணுவத்தில் பெண்கள் கமா‌ண்டர் பிரிவு ‌அதிகாரிகளாகப் பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதுகாப்புப்படைகளில் பெண்களுக்கு முழுமையான பணிச் சேவை வழங்குவது தொடர்பான வழக்கில், ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. ‌அதற்கு, ஆண்களின் உடல் வலிமைக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். ஆனால் பெண்கள் கமா‌ண்டர்களாக பணியாற்றலாம் என நீதிபதி சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

image

இந்நிலையில் ராணுவத்தில் பெண்களை கமாண்டராக நியமிக்கவும், நிரந்தர பதவி வழங்கவும் உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதன் மூலம் பெண்களை மத்திய அரசு அவமதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ராணுவத்தின் கமாண்டர்களாகவும், நிரந்தர பதவிகளும் ஆண்கள் மட்டுமே இருக்கத் தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement: