“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா வழக்கில் இன்னும் பல சட்டத் தீர்வுகள் உள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் தெரிவித்துள்ளார்.


Advertisement

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால், தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக்கொண்டே போனது.

image


Advertisement

“ஜல்லிக்கட்டு நடத்தினால் சாதிய பிரச்னைகள் ஏற்படும்” - நீதிமன்றத்தில் வாதம்

இதைத்தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறையாவது கண்டிப்பாக குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

image


Advertisement

‘தாஜ்மஹாலில் காதலை சொன்ன மிஸ்டர் 360’: ஏபிடி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்..! 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கூறும்போது, “இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் எங்கள் சட்ட தீர்வுகளின் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையிடுவோம்” எனத் தெரிவித்தார். இந்த தீர்ப்புக்கு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தமே காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement