‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமலா பால் தனது விவாகரத்து தொடர்பான சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.


Advertisement

இயக்குநர் ஏ.எல்.விஜயின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை அமலா பால் அவருடன் காதலில் விழுந்தார். அதனையடுத்து அமலா பாலுக்கும் விஜய்க்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகவே, 2017 ஆண்டு சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

image


Advertisement

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு, இயக்குநர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சில கருத்துகளை கூறியிருந்தார். அதில் விஜய் மற்றும் அமலா பால் இடையேயான விவாகரத்திற்கு தனுஷ்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் விஜயை விவாகரத்து செய்தது குறித்தும் தனுஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் அமலா பால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

image

அமலா பால் இதுகுறித்து குறிப்பிடுகையில், தனது விவாகரத்து தொடர்பான சர்ச்சை தேவையற்றது என்று கூறியுள்ளார். மேலும், அதை தனிப்பட்ட விஷயம் என்றும் கூறியுள்ளார். தனது விவாகரத்திற்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை என்ற அவர், இந்த முடிவு முழுமையாக தன்னால் எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் தனுஷ், தன்னுடைய நலம் விரும்பி எனக் கூறியுள்ளார். இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வது பற்றி பேசிய அமலா பால், தனது தற்போதைய திட்டங்களை முடித்த பின்னர் ஒரு செய்தியை பகிர்ந்துக் கொள்வேன் எனக் கூறினார்.


Advertisement

அஜித்தால் தாமதமாகிறதா வலிமை படப்பிடிப்பு? - வருத்தத்தில் இயக்குநர்?

அமலா பால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் சில சிக்கல்களால் தடைப்பட்டு வந்தது. அந்தப் படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement