நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ல் தூக்கு - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 4 பேருக்கும் தனித்தனியே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி, திகார் சிறை நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன் விசாரணைக்கு வந்தது.

image


Advertisement

சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன் உயிரிழப்பு! 

விசாரணையில், சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயல்வதால்தான் ஐதராபாத் என்கவுன்ட்டர் போன்ற சம்பவங்களை மக்கள் கொண்டாடுவதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் கடந்த 7 ஆண்டுகளாக நீதித்துறையுடன் விளையாடுவதாகவும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

image


Advertisement

இதற்குக் குற்றவாளிகள் தரப்பில், கடைசி மூச்சு உள்ள வரை சட்டப்போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், நால்வருக்கும் ஒன்றாகத்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் கடந்த 2ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து - ரயில் நிலையத்தில் நகையை பறிகொடுத்த மூதாட்டி 

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement