நாமக்கல் மாவட்டம் அடுத்த சாணார்பாளையத்தில் அமைந்துள்ளது திருப்பதி முனியப்பசாமி கோயில். அங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த விழாவில் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை சுமார் 260 ஆடுகள் வெட்டப்பட்டு, உணவு தயாரிக்கப்பட்டு முனியப்ப சாமிக்கு விருந்து படைக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த உணவு மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் விழாவிற்கு வந்த மக்கள் அன்னதானத்தில் பங்கேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றும் முனியப்பசாமிக்கு நாட்டுக்கோழி விருந்தும் படைக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றன.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு