டிடிவி தினகரனை இன்று மேலும் மூன்று எம்எல்ஏ-க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
டிடிவி தினகரன் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி அளித்தார். ஆனால் எம்எல்ஏ-க்களோ நாங்கள் டிடிவி பக்கம் தான் என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொருவராக, டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் டிடிவி-க்கு ஆதரவாக 11 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நாள் முடிவில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 27 ஆக ஆனது. இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ, நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். தற்போது வரை டிடிவி-க்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அரசு சற்று கலக்கத்தில் உள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்