திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது உறுதி என்று கூறியுள்ளார்.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறுத்தக் கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை, 2,05,66,082 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட இந்த கையெழுத்துப் படிவங்கள் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனை கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்