JUST IN

மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. சிஏஏ போராட்டங்கள் எதிரொலிக்குமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

 

''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா 

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” - தஸ்லீமாவுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்

சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement: