விவசாயி கத்தியால் குத்திப் படுகொலை: காஞ்சிபுரத்தில் பரிதாபம்

Murder-at-Kanchipuram

செல்போனை திருடியவர்களை விரட்டிச் சென்ற விவசாயி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம். அவர் மோட்டூரில் செங்கல் சூளை அருகே நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12:00 மணிக்கு அங்கு வந்த திருடர்கள் 3 பேர், அவர் பாக்கெட்டில் இருந்த மொபைலை திருட முயற்சித்துள்ளனர். சட்டென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பன்னீர்செல்வம், சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை எழுப்பியுள்ளார். மேலும், அவர்களை கையும்களவுமாகப் பிடிக்க விரட்டி சென்றபோது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் விவசாயி பன்னீர்செல்வத்தை இடது மார்பில் கத்தியால் குத்திவிட்டு ‘போடா பன்னீரு’ என்று சொல்லி கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறார். பன்னீர்செல்வத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்  அந்த திருடர்கள் மூவரையும் விரட்டியுள்ளனர். அதில் பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்திய சதீஷ் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயத்துடன் கிடந்த பன்னீர்செல்வத்தை அவசரம் அவசரமாக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் மரணமடைந்தார். பன்னீர்செல்வம் கொலை உள்நோக்கத்துடன் நடந்ததுபோல் உள்ளது என்றும், அதனால்தான் கத்தியால் குத்தியவர் பெயரைச் சொல்லி கீழே தள்ளிவிட்டுச் சென்றார் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாகரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சதீஷ் மீது சென்னையில் பல வழக்குகள் உள்ளன. தப்பியோடிய அவனது கூட்டாளிகள் நிலவரசன், ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement