நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடியதால். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து லெவன் உடனான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று சமனில் முடிந்தது. பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்கும், நியூஸிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா நல்ல தொடக்கம் தந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் விளையாடுகிறதா இந்தியா ?
இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய மயங்க் அகர்வால் இதில் அற்புதமாக விளையாடினார். பிரித்வி ஷா அதிரடி தொடக்கம் தந்து 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் மீண்டும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து கடந்த சில ஆட்டங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த மயங்க் அகர்வாலும், ரிஷப் பன்ட்டும் வேகமாக ரன் சேர்த்து அதிரடியாக விளையாடினர். இதில் மயங்க் அகர்வால் 81 எடுத்த நிலையில் "ரிடயர்ட் அவுட்" ஆனார்.
ஆனால் ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடினார். 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்து 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரித்திமான் சாஹா 30, அஸ்வினும் 16 ரன்களுடன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்து போட்டி டிராவானது. முதல் டெஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ரிஷப் பன்ட்டின் இந்த அதிரடியான ஆட்டம் தேர்வுக் குழுவினரை கவர்ந்துள்ளது. அநேகமாக முதல் டெஸ்ட்டில் சாஹாவுக்கு பதிலாக பன்ட் இடம் பெறுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!