பாரத கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இசை, பாட்டு மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘யக்ஷா’ கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈஷாவின் 26- ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் நடக்கும் ‘யக்ஷா’ திருவிழாவில் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களுக்கு கலை விருந்து படைக்க உள்ளனர். கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவும், தேர்ந்த கலை ரசிகர்கள் பாரம்பரிய கலைகளை கண்டு களிப்பதற்கும் இது ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது.
தோனி எப்போது சென்னை வருகிறார் ? வெளியானது தகவல்
பிப்ரவரி 18-ம் தேதி கலா ராம்நாத்தின் இந்துஸ்தானி வயலின் இசை நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஹைதராபாத் சசோதரர்கள் என அழைக்கப்படும் சேஷாச்சாரி மற்றும் ராகவாச்சாரி ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், 20-ம் தேதி ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம். மேலும், பாரம்பரிய துணி ரகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரியன்று வருகை தரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு