இயற்கை உபாதைக்காகச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்- போலீசார் விசாரணை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செஞ்சி அருகே இயற்கை உபாதைக்காகச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் விழுப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி
வந்தார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செ.புதூர்
எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வயலில் தனியாக வேலை
செய்துகொண்டிருந்த பெண்மணி, தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவே சக்திவேல் வருவதாக நினைத்துக்கொண்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
பெண்ணின் கூச்சலைக் கேட்டு அருகிலிருந்தவர்களும் உறவினர்களும் ஓடி வந்துள்ளனர்.

image


Advertisement

இதனிடையே பயந்து அங்கிருந்து ஓடிய சக்திவேலை விரட்டிச் சென்ற அவர்கள், சக்திவேலை பிடித்து கை கால்களை கட்டி தாக்கியுள்ளனர். இதில்
சக்திவேலுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு
மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

விசாரணை மேற்கொண்ட பெரியதச்சூர் போலீசார் , கூச்சலிட்ட பெண் அவரது கணவர் ராஜா உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

loading...

Advertisement

Advertisement

Advertisement