ஆசிரியர்கள் பங்கேற்க கூறும் சுற்றறிக்கையை திரும்பப்பெற கெஜ்ரிவாலுக்கு பாஜக எம்எல்ஏ விஜேந்தர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் பதவியேற்பு விழாவில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு பாரதிய ஜனதா எம்எல்ஏ விஜேந்தர் குப்தா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விளைவாக 15 ஆயிரம் ஆசிரியப் பெருமக்களும், அதிகாரிகளும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு்ள்ளதாகக் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கை சர்வாதிகாரப் போக்குடன் இருப்பதாகச் சாடியுள்ள விஜேந்தர் குப்தா, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள கெஜ்ரிவால், ஆட்சி நிர்வாகம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
ரோகிணி தொகுதியிலிருந்து மீண்டும் தேர்வாகியிருக்கும் விஜேந்தர் குப்தா, கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்