அதுக்குள்ளேயே ‘ஹெச்டி பிரிண்ட்டா..?’ - ஷாக் ஆன 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' படக்குழு

Vijay-Deverakonda---s-World-Famous-Lover-leaked-online-by-TamilRockers-within-hours-of-release

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ திரைப்படம் நேற்று வெளியானது. கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் தேவரகொண்டா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,  ராஷிகண்ணா, கேத்ரின் தெரசா மற்றும் இசபெல்லி லியட் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


Advertisement

image

'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி விஜய் தேவரகொண்டாவுக்காக நகர்ந்தாலும், அடுத்தப்பாதி திரைக்கதையின் பலவீனத்தாலும் படத்தின் நீளத்தாலும் முடங்கிப் போய்விட்டது என்ற கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் படம் வெளியாகி அடுத்த சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று படம் வெளியான நிலையில், சில மணி நேரங்களில் HD பிரிண்ட் வெளியாகியுள்ளது.


Advertisement

image

இணையத்தில் இருந்து படத்தை நீக்க படக்குழு தீவிர முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. வெளியாகும் தினத்தன்றே புதிய திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது திரைத்துறைக்கே பெரிய சவாலாக இருப்பதாகவும், சமீபத்தில் தெலுங்கில் வெளியான பல திரைப்படங்கள் உடனடியாக இணையத்திலும் வெளியாகிவிட்டதாகவும் தெலுங்கு திரைத்துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

''நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்'' - ஆர்சிபியின் லோகோ மாற்றத்திற்கு விஜய் மல்லையா கருத்து!


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement