‘புலியை போட்டோ எடுத்த புலி’ - தோனி பதிவிட்ட புகைப்படத்தால் குதூகலமான ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேசியப் பூங்காவில், தான் எடுத்த புலியின் புகைப்படத்தை தோனி பகிர்ந்ததை வைத்து அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

இந்திய அணி தற்போதைய காலத்தில் தோல்விகளை விட, அதிகமான வெற்றிகளுடனே பயணித்து வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு திருப்தியின்மை இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக தோனியின் ரசிகர்கள், முன்பு போல போட்டியை காண விரும்புவதில்லை என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

image


Advertisement

டாஸ்மாக் கடையில் கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடி கும்பல்

அத்துடன் தோனி பல மாதங்களாக விளையாடாமல் இருப்பதால், அவரது ஆட்டத்தை காண அவர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு விடைக்கொடுக்கும் தொடராக அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் போட்டி இருக்கும் என்பதால் அதை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், தோனி பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் எதையாவது பகிர்வாரா என்று எண்ணி, அவரது சமூக வலைத்தள கணக்குகளை ரசிகர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

image

எம்.எல்.ஏக்கள் பயன்படுத்தாமல் வெறிச்சோடிப் போன குளிர்சாதனப் பேருந்து

இந்நிலையில், நேற்று தோனி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அது ஒரு புலியின் புகைப்படம். அத்துடன் “நீங்கள் புலியை கண்டாலோ அல்லது அது உங்களை பார்க்க நேர்ந்தாலோ, புகைப்படம் எடுக்க போதுமான நேரம் கிடைக்கும்” என தோனி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை குறிப்பிட்டு தற்போது தோனி ரசிகர்கள், அவரை புகழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஒரு புலியை மற்றொரு புலியே புகைப்படம் எடுத்துள்ளது என்றும், ஒரு புலியை ஒரு சிங்கம் போட்டோ எடுத்துள்ளது என்றும் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement