JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

தமிழக பட்ஜெட் : வேளாண்துறைக்கு என்னென்ன திட்டங்கள் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் நலம் சார்ந்த வேளாண்துறைக்கு மொத்தம் ரூ.11,894.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட திட்டங்கள் சிலவற்றை காண்போம்.

  • நிலையான கரும்பு உற்பத்திக்கு, 12 கோடி ரூபாய் செலவில் ஏறக்குறைய 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீடித்த நவீன கரும்பு சாகுபடித் திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கரும்பு உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை, 2019-20 ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திலும் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த பண்ணையமுறை 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

தமிழகத்தின் கடன் தொகை... பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல்

  • வேளாண் நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் பெறுவதற்கு, ‘உழவர்-அலுவலர் தொடர்புத் திட்டத்தை’ அரசு அறிமுகம் செய்யும் எனப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும், நடப்பு ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.724.14 கோடி மாநிலத் பங்குத் தொகையும் உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் ஆகியவற்றிற்கான மையங்களை அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • மேலும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை அதிகரிக்க, 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு

  • விவசாயிகள் பயன்படும் வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் 100 வட்டார அளவிலான மற்றும் 250 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • இதுதவிர பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடி செலவில் உணவுப் பூங்காக்கள் நிறுவப்படும் எனப்பட்டுள்ளது.
Advertisement: