JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

வெளியானது ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ : மீண்டும் ரோமாண்டிக் ஹீரோவாக அசத்திய விஜய் தேவரகொண்டா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் தேவரகொண்டாவின்  ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் தேவரகொண்டா உடன் ராஷிகண்ணா, கேத்ரின் தெரசா மற்றும் இசபெல்லி லியட் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

image

 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமைடைந்த தேவரகொண்டா அதன் பின்னர் அனைவராலும் ‘ரவுடி’ என்றே அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அந்தப் படத்தில் அவர் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரம். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் அவர் செய்த சில மேனரிசங்கள் இளைஞர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் அதன் பிறகு வெளிவந்த இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இதனால் இவரின் டியர் காம்ரேட் உள்ளிட்ட சிலப் படங்கள், பெரிய வரவேற்போடு வெற்றியும் பெற்றன.

image

அந்தவரிசையில் இன்று ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கடந்த படங்களை போலவே இந்தப் படத்திலும் கனவுக் கன்னிகளின் காதலனாக வருகிறார் தேவரகொண்டா. படத்தில் முதன் முறையாக எழுத்தாளாராக நடித்திருக்கும் தேவரகொண்டாவின் கதாப்பாத்திரம் அப்படியே அர்ஜுன் ரெட்டியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் படத்தின் முதல் பாதி விஜய் தேவர்கொண்டாவுக்காக நகர்ந்தாலும், அடுத்தப்பாதி திரைக்கதையின் பலவீனத்தாலும் படத்தின் நீளத்தாலும் முடங்கிப் போய்விட்டது என்ற கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

 

 

 

 

Advertisement: