“இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி”- சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வர்ணனையாளர்..!

Every-Indian-must-know-Hindi--our-mother-tongue--says-BCCI-commentator-during-Ranji-Trophy-match

ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் நம் தாய் மொழி என்று கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

கர்நாடகா - பரோடா அணிகளுக்கு இடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை தனியார் தொலைக்காட்சி ஒன்று நேரலை செய்து வருகிறது. அப்போது இந்தப் போட்டியை இரண்டு பேர் வர்ணனை செய்து வந்தனர். அப்போது வர்ணனையாளரில் ஒருவர் " சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். அதிலும் அவர் சரியான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறார். அவர் "டாட் பால்" என்பதை "பிந்தி பால்" என அழகாக இந்தியில் கூறுகிறார்" என்றார்.


Advertisement

"ரோஜாவுக்கு பதிலாக மரக் கன்று கொடுங்கள்"- பீகார் அரசின் காதலர் தின ஐடியா 

image

அப்போது மற்றொரு வர்ணனையாளர் "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தி நம் தாய் மொழி, இந்திக்கு மேல் உயர்வான மொழி வேறு எதுவும் இல்லை. எனக்கு சில பேர் மீது எரிச்சலாக இருக்கிறது. சிலர் என்னிடம், கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியை எப்போதும் பேசுகிறார்கள்? என கேட்கிறார்கள். இந்தியாவில வசிக்கும் நாம் இந்தியை பேசாமல் வேறு எதை பேசுவது, அதுதானே நம் தாய் மொழி" என வர்ணனையின்போது தெரிவித்துள்ளார்.


Advertisement

கிரிக்கெட் வர்ணனையாளரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வர்ணனையாளர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுஷீல் டோஷி என கூறப்படுகிறது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement