சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் ஆஜராக முடியாதது குறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதையடுத்து பேசிய நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கி கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மேயர் பதவியை பிடிப்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக சாடினர்.
மாநகராட்சி பகுதியில் இல்லாதவர்கள் தான் அதிகமாக சொத்து வரி செலுத்துவதாகவும், சொத்து வரியை உயர்த்தாத காரணத்தால் தான் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
Loading More post
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’