JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள ‘குட்டி கெஜ்ரிவால்’!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வைரலான குட்டிப்பையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் குதூகலமாகவே இருந்தனர். டெல்லி முழுவதும் ஆரவாரங்கள் நடைபெற்றன. ஆரவாரங்கள் மத்தியில் தனித்த முகமாக ஊடகங்களில் இடம்பெற்றான் ஒரு சின்னஞ்சிறு சிறுவன். ஏறக்குறைய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட தொண்டர்கள் அந்தச் சிறுவனை ‘குட்டி கெஜ்ரிவால்’ எனத் தூக்கிக் கொஞ்சி வந்தனர்.

image

அதற்கு ஏற்ப அந்தச் சிறுவன் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று தொப்பி, மூக்குக் கண்ணாடி மற்றும் குளிருக்கும் தலையில் சுற்றும் மஃப்ளர் என வலம் வந்தான். ஆகவே அந்தச் சிறுவனுடன் சேர்ந்து பலரும் செல்ஃபி எடுத்து வந்தனர். இந்தப் பெரும் பரபரப்புக்கு இடையிலும் சற்றும் சளைக்காமல் அந்தச் சிறுவன் உற்சாகமாக ஆட்டம் போட்டதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. ஆகவே அவனைச் சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வந்தன.

image

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவுக்கு குட்டிப் பையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி, வருகின்ற 16ம் தேதி நடைபெறவுள்ள கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க குட்டி மஃப்ளர்மேனுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளது.

‘ஒரு கேப்டனுக்குக் கூட சொல்ல மாட்டீங்களா?’ - ஆர்சிபி செயலால் அதிர்ச்சி ஆன விராட் கோலி

Advertisement: