சிறுமியை காரில் கடத்திய மர்மநபர்கள் - 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குளித்தலை அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 13 வயது சிறுமியை போலீசார் மீட்டனர்.


Advertisement

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வில்லுக்காரன் பட்டியைச் சேர்ந்தவர் கீதா(13). இவர் தேசிய மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலையில் எழுந்து இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல" - ஏ.ஆர்.ரஹ்மான் 


Advertisement

image

அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் சிலர் சிறுமியை காரில் கடத்திச் சென்றதாக கூறியுள்ளனர். இதையடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி கண்டுபிடித்து மீட்டு விட்டனர். ஆனால், கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு 


Advertisement

image

பின்னர், சிறுமியிடம் விசாரணை செய்து மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement