தீராத சோகம் : பெயர், லோகோவை மாற்றுகிறதா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளில் முக்கியமான ஒரு அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. கடும் முயற்சி செய்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருக்கிறது இந்த அணி. இதனால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.


Advertisement

image

சிறார் ஆபாச படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் - ஓட்டல் தொழிலாளி கைது

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக அந்த அணியின் பெயரில் இருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்துள்ளது.


Advertisement

image

"நாடு முழுவதும் ஜாதி, மொழியால் மக்களை துண்டாடும் அரசுகளே இருக்கிறது" - பிரமேலதா விஜயகாந்த்

பெயரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் அனைத்து கணக்குகளின் புரொஃபைல் பிக்சர், கவர் பிக்சர் ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன ? என்று அந்த அணியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அணி நிர்வாகம், பெயரை மாற்றுவதோடு அணியின் லோகோவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement