JUST IN

Advertisement

"நாடு முழுவதும் ஜாதி, மொழியால் மக்களை துண்டாடும் அரசுகளே இருக்கிறது" - பிரமேலதா விஜயகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எந்த மாநிலத்தில் யார் முதலமைச்சராக வந்தாலும் விஜயகாந்த் கொள்கையை தான் அவர்கள் பயன்படுத்துவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று 118 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்திலேயே உயரமான கொடி தேமுதிக அலுவலகத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக கூறினார். மற்ற கட்சிகள் கடை, கடையாக வசூல் செய்து கட்சி விழாவைநடத்துவதாகவும், ஆனால் தேமுதிகவில் அவ்வாறு இல்லை என்றும் தெரிவித்தார்.

image


Advertisement

பிப். 16ம் தேதி டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

மற்ற மாநிலங்களில் யார் முதலமைச்சராக வந்தாலும், விஜயகாந்த் கொள்கையை தான் அவர்கள் பயன்படுத்தி வருவதாக கூறினார். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று விஜயகாந்த் கூறிய திட்டத்தையே, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடைபிடித்து வருவதாக குறிப்பிட்டார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கட்சி துவங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக ஆட்சி அமைத்து உள்ளார் எனவும், அவருக்கு வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

image

‌16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை - 17 வயது சிறுவன் கைது

தொடர்ந்து பேசிய அவர், “நல்ல ஆட்சியை மக்கள் புரிந்துக்கொண்டு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஜாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. கொடியிலேயே தேமுதிகவின் மொத்த கொள்கையும் அடங்கி உள்ளது. தேமுதிகவிற்கு என்ன கொள்கை என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு இந்த விளக்கமே போதுமானது என்று நினைக்கிறேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் வகையில் வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.


Advertisement

தேமுதிக கட்சியை 4 புறமும் சூழ்ச்சியால் அடைத்தாலும், இன்று மீண்டு வந்துள்ள விஜயகாந்த் 2021 தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவார்” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement