மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்த நிலையில், ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த வாரம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
‘உயிருக்கு போராடிய மகன்.. தண்ணீர் தொட்டியில் சடலமாக மகள்’ - அதிர்ச்சியில் தாய்.. தப்பியோடிய தந்தை
இந்நிலையில், விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. அதன்படி விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார் எனவும் இதில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது எனவும் செய்திகள் பரப்பப்பட்டன.
மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட சில பிரபலங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் தகவல் பரவியது. இந்த மதமாற்ற புகாரினால்தான் விஜய் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், இதுகுறித்த செய்திகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” எனத் தெரிவித்துள்ளார்.
பணம் கேட்டு பாட்டிக்கு தொல்லை கொடுத்த பேரன்.. கொடுக்க மறுத்ததால் நேர்ந்த விபரீதம்
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை