ஆம் ஆத்மி வெற்றிக் கொண்டாட்டத்தில் தனித்து தெரிந்த ‘குட்டி கெஜ்ரிவால்’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

சமூக வலைத்தளத்தில் ‘குட்டி கெஜ்ரிவால்’ புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

டெல்லி சட்டசபைத் தேர்தல்தான் இன்றைத் தலைப்புச் செய்தி. காலையிலிருந்தே டெல்லியில் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையிலிருந்து வருகிறது. டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்க உள்ளது. இறுதிக்கட்ட அறிவிப்புகள் வருவதற்கு முன்பே பலரும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துச் செய்திகளை பகிரத் தொடங்கிவிட்டனர்.


Advertisement

image

ஆகவே காலையிலிருந்தே ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்த அக்கட்சி தொண்டர்கள் மேலும் உற்சாக மிகுதியில் ஆட்டம் பாட்டம் என அந்தப் பகுதியை விழாக்கோலத்தில் மூழ்கடித்து வருகின்றனர். இந்த வெற்றி செய்திக்கு இடையில் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

image


Advertisement

இந்த ஆரவாரங்கள் மத்தியில் தனித்த முகமாக இன்று ஊடகங்களில் இடம்பெற்றுள்ளான் ஒரு சின்னஞ்சிறு சிறுவன். ஏறக்குறைய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட தொண்டர்கள் அந்தச் சிறுவனை ‘குட்டி கெஜ்ரிவால்’ எனத் தூக்கிக் கொஞ்சி வந்தனர். அதற்கு ஏற்ப அந்தச் சிறுவன் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று தொப்பி, மூக்குக் கண்ணாடி மற்றும் குளிருக்கும் தலையில் சுற்றும் மப்ளர் என வலம் வந்தான். ஆகவே அந்தச் சிறுவனுடன் சேர்ந்து பலரும் செல்ஃபி எடுத்து வந்தனர். இந்தப் பெரும் பரபரப்புக்கு இடையிலும் சற்றும் சளைக்காமல் அந்தச் சிறுவன் உற்சாகமாக ஆட்டம் போட்டதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. ஆகவே அவனைச் சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வந்தன.

image

இந்தச் சிறுவனின் புகைப்படத்தை, ஆம் ஆத்மி கட்சியும் ‘மப்ளபர் மேன்’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சிவப்பு சொட்டர், கருப்பு மப்ளபர், குட்டி மீசை, மூக்குக் கண்ணாடி என தோற்றமளித்த அந்தச் சிறுவனின் புகைப்படம் ட்விட்டரில் வெளியான சிலமணி நேரங்களிலேயே 16,000 நபர்கள் விரும்பியுள்ளனர். 2,500 க்கும் மேற்பட்டோர் அதை ரீ-ட்வீட் செய்துள்ளனர். மேலும் ‘நெட்டிசன்கள் பலரும் இந்தக் குட்டி கெஜ்ரிவாலை ‘சோ க்யூட்’ எனவும் பாராட்டி வருகின்றனர்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement