[X] Close

தோற்கடிக்க முடியாதவரா கெஜ்ரிவால்..? டெல்லியில் பாஜகவின் வியூகம் தோற்பது ஏன்?

Subscribe
Modi-s-party-poised-to-lose-Delhi-election

 


Advertisement

ஐஐடியில் படித்து வருமான வரித்துறை அதிகாரி ஆக இருந்த கெஜ்ரிவால் பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பிடித்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல் முறையாக முதலமைச்சரானார் கெஜ்ரிவால். ஆனால் அவரது ஆட்சி 45 நாட்கள் மட்டுமே நீடித்தது. லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாததை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.

image


Advertisement

2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியிடம் கெஜ்ரிவால் தோற்றார். ஆனால் 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அதிசயக்கத்தக்க வெற்றியுடன் அரியணை ஏறியது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 54% வாக்குகளை அக்கட்சி அள்ளியது.

இந்த தேர்தலில் தங்கள் ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களை பிரதான ஆயுதமாக கையில் எடுத்து கெஜ்ரிவால் பரப்புரை மேற்கொண்டார். கெஜ்ரிவாலின் ஆட்சி காலத்தில் அவர் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்கள் ஏராளம். அவற்றில் குறைசொல்லும் அளவுக்கு பாஜகவிடமோ, காங்கிரஸிடமோ பெரிதாக காரணங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

image


Advertisement

ஆனால் டெல்லியில் கடந்த 20 வருடங்களாக அரியணையில் ஏற முடியாமல் இருக்கும் பாஜகவின் காத்திருப்பு இன்னும் நீடிக்கிறது. ஆம், இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியே மூன்றாவது முறையாக அரியணையில் ஏற உள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அப்படி எந்தவிதமான தேர்தல் வியூகங்களை கெஜ்ரிவால் கையில் எடுத்தார் என்று தோன்றுகிறதா? மற்றவர்களின் விமர்சனங்களை காதில் வாங்காமல் அவரின் குறிக்கோளை மட்டுமே மனதில் வைத்து பயணித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தது. ‘தீவிரவாதி’ போன்ற விமர்சனங்களும் அவர் மீது மறைமுகமாக முன்வைக்கப்பட்டன. அமித்ஷா, மோடி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இந்து விரோதி என்ற நோக்கில் பரப்புரையை பாஜக மேற்கொண்டது. இங்குதான் பாஜகவின் வியூகம் சறுக்கியது என்றே சொல்லலாம்.

image

பாஜகவின் கடும் விமர்சனங்களை கவனமாக கையாண்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு கண்டிப்பாக உண்டு என நம்பினார். அதனால் அவர் செய்த வளர்ச்சி திட்டங்களான 20,000 லிட்டர் வரை மாதாந்திர குடிநீர் பயன்பாட்டுக்கு கட்டணம் கிடையாது, 200 யூனிட் வரை மாதாந்திர மின்சார நுகர்வுக்கு கட்டணம் கிடையாது, 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மானிய கட்டணம்தான், அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது, பெண்களுக்கு டி.டி.சி பேருந்துகளில் இலவச பயணம், தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வுக்கான நெறிமுறைகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியுமாறு பரப்புரை மேற்கொண்டார்.

image

மேலும் டெல்லியில் பாஜகவால் எளிதாக இந்து மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை. தனது வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் அனைத்து மக்களையும் சென்று சேர சமூக வலைதளத்தை பக்காவாக பயன்படுத்தினார் கெஜ்ரிவால். பிரசாந்த் கிஷோரும் பக்கபலமாக இருந்தார். வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லை உள்ளடக்கியே அரவிந்த் கெஜ்ரிவாலின் பரப்புரை இருந்தது. இந்துக்களின் வாக்குகளை சம்பாதிக்க அவர் பெரிதாக மெனக்கெடவும் இல்லை. இதனை உணர்ந்து கொண்ட டெல்லி வாழ்மக்கள் 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் அரியணையில் ஏற வழிவகுத்துத் தந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close