JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc



அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சுற்றிப்பார்க்க உள்ளனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் ட்ரம்பே போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.

image

 

இந்தப் பயணத்தின் போது அமெரிக்கா, இந்தியா இடையே பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவும், இந்தியாவும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து வந்த நிலையில், இந்த நிலைமை மாற்றும் வகையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இதில் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Lockheed Martin நிறுவனத்திடமிருந்து கப்பற்படைக்குத் தேவையான MH-60R SEAHAWK ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்பில் 24 ஹெலிகாப்டர்கள் வாங்கப்ப‌டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதற்கு முன்பாக காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனப் பலமுறை ட்ரம்ப் அறிவித்திருந்தார். அது தொடர்பாக பிரதமர் மோடியிடம் அவர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஈரான் பிரச்னை, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியப் பேச்சுவார்த்தையினை நடத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது. அதிபராகப் பதவி ஏற்ற பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement: