JUST IN

Advertisement

ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் தண்ணீர் கிடைக்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தண்ணீர் என்பது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் சார்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இன்று துவங்கியது. இந்தக் கண்காட்சியில் தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில், துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.

image


Advertisement

இதில் கலந்துக் கொண்ட ரஹ்மான் செய்தியாளர்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “தண்ணீர் தேவை குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவில் ஒரு பாடலை நான் உட்பட பலர் பாடி உள்ளோம். விரைவில் அதை வெளியிட உள்ளோம். நான் தான் அதற்கு இசை அமைத்துள்ளேன்” என்றார்.

ஆஸ்கர் வென்ற படமும் விஜய் படமும் ஒரே கதையா? - ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்

 


Advertisement

image

மேலும், “தண்ணீர் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். ஏழைப் பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் குழாயில் வரும் குடிநீரை அனைவரும் பருக கூடிய நிலை ஏற்பட வேண்டும். இதுதான் எனது ஆசை. இந்த உலக கீதம் 'Hands around the world' என்ற பெயரில் விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement