பணியாளர் காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய ஆணையத்தின் உறுப்பினர்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி. இவர் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய அணி மேலாளர் ஐசிசி-க்கு வலியுறுத்தல் 

துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து தேசியத் துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் ஆய்வு மேற்கொண்டார். மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பதையும் துப்புரவுப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.


Advertisement

image

துப்புரவுப் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் குடியிருப்பு வசதிகள் குறித்தும், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

image


Advertisement

எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

பின்னர் சிறந்த முறையில் பணியாற்றிய 5 துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களுக்கு மாலை, மற்றும் சால்வை அணிவித்து கெளரவ படுத்தினார் ஹீர்மானி. மேலும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். இச்சம்பவம் அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement