JUST IN

Advertisement

உலகக்கோப்பை போனாலும் சற்றே ஆறுதல்... யாஷாஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகனாக இந்தியாவின் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.


Advertisement

image

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஜெய்ஸ்வால் ஜூனியர் உலகக் கோப்பை தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டது, சற்றே ஆறுதல் அளித்துள்ளது.


Advertisement

image

அதேபோல இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் பிஷ்னாய் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 இன்னிங்ஸில் 4 அரைசதம் மற்றும் 1 சதம் உட்பட 400 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுள் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

U19: இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது வங்கதேசம்! 


Advertisement

தொடர் நாயகன் விருதை பெற்ற பின் பேசிய ஜெய்ஸ்வால் "தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் போட்டி தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன், இது எனக்கு ஓர் நல்ல அனுபவமாக இருந்தது. இதே போன்ற ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement