விஜய்க்குத் தங்கையாக நடிக்க உள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவர் பல நல்ல படங்களைத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆகவே கோலிவுட் வட்டாரத்தில் அவருக்கென தனித்த அடையாளம் உள்ளது. இவர் நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்குத் தங்கையாக இவர் நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.
இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் விஜய்க்குத் தங்கையாக நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முதலில் இவருக்குத் தங்கையாக நடிப்பதில் சில சங்கடங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்திற்காக அதனை ஏற்றதாகவும் ஒருநாள் நிச்சயம் அவருக்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும் என்று காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை அறிந்த விஜய்யின் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் பதிலைப் பாராட்டியுள்ளனர். மேலும் இவரது கனவு வெற்றிபெறவும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால் இது குறித்துப் படக்குழு தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
கேஜிஎஃப் 2 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை
இதற்கு முன்னதாக, பாண்டிராஜ் இயக்கிய 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இவரின் 'வானம் கொட்டட்டும்' படத்தை தானா இயக்கி உள்ளார். இதில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தானு, மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதனை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!