3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை : என்னதான் ஆச்சு பும்ராவுக்கு ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் ஏவுகணை ஜஸ்ப்ரீத் பும்ரா. டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தவொரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, பும்ராவின் அச்சுறுத்தும் பந்துவீச்சை கண்டு நடுங்காத பேட்ஸ்மேன்களே இல்லை என கூறலாம். அதுவும் கடைசி ஓவர்களில் அவரது பந்துவீச்சு அசத்தலாக இருக்கும். கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் பும்ரா ஒரு "டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்". அதாவது இறுதி ஓவர்களில் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க முடியாமல் தடுப்பார்.


Advertisement

image

இத்தனை புகழைக்கொண்டு, கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பவுலராக இருந்து வரும் பும்ராவுக்கு நியூசிலாந்தில் போதாத காலமாக இருக்கிறது. அதுவும் நியூசிலாந்து இடையே நடந்து முடிந்து இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் "டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்"டை அடித்து துவைத்தனர் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள். காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்திருக்கும் பும்ரா, முன்பு போல் இல்லாமல் சுமாராகத்தான் பந்துவீசுகிறார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட கோலி.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணங்கள்..! 

image

ஆனால், பும்ரா நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியிருந்தால் நிச்சயம் இந்தியா இத்தொடரை வென்று இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். காயத்துக்கு பின் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள பும்ரா, அதில் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். தவிர, தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது வேதனையாக விஷயமாக உள்ளது.


Advertisement

image

அதுவும் நேற்றையப் போட்டியில் டெத் ஓவர்களில் பும்ரா மொத்தமாக 3 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதேநேரம் கடைசி ஓவரில் 14 ரன்கள் வழங்கினார் பும்ரா. காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பின்புதான் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பேட்டிங்கில் கோலி மீது எப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அப்படிதான் பும்ராவிடம் பந்துவீச்சில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் இனி வரும் ஆட்டங்களில் பும்ரா நிறைவேற்றுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement