மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்ட ராணுவ வீரர் - 20 பேர் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் புகுந்து ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 20பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் பணயக்கைதிகளாக சிக்கியிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


Advertisement

தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் நுழைந்த ராணுவ வீரர் ஒருவர் மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் உயிரிழந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜக்ரபந்த் தொம்மா என தெரியவந்துள்ளது.

     image


Advertisement

தகவலறிந்து வணிக வளாகத்திற்குள் புகுந்த பாதுகாப்புப்படையினர், அங்கிருந்த பலரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் மேலும் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பதாக கூறப்படுவதால் அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் அவ்வபோது துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    image

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவதற்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் மரணத்தை எவராலும் தவிர்க்க முடியாது என அந்த நபர் குறிப்பிட்டிருந்ததாகவும், பிறகு அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் காட்சியை அவர் பேஸ்புக்கில் ஒளிபரப்பியதாகவும் தெரிகிறது. தாக்குதலில் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Advertisement

இதனிடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை சுட்டுக்கொன்றதாக தாய்லாந்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement