வறட்சியை நோக்கி வேகமாகச் செல்லும் முதுமலை புலிகள் காப்பகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.


Advertisement

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வனப்பகுதி வறட்சியை நோக்கி வேகமாகச் செல்கிறது. இதனால் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

image


Advertisement

கடந்த ஆண்டு முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி தீயில் கருகி சாம்பலானது. இந்த ஆண்டு அதேபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மனித தவறுகளால் காட்டுத்தீ ஏற்படுவதைத் தவிர்க்கச் சாலை ஓரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

image

இதனிடையே வனத்திற்குள் நிலவும் வறட்சியால் உணவு கிடைக்காமல் தேக்கடி ஏரிக்கரைக்கு வந்து மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமை கூட்டத்தைச் சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கிறார்கள். கேரள மாநிலம் தேக்கடி வனத்திற்குள் வறட்சி நிலவுவதால் வனத்திற்குள் உணவுக் கிடைக்காத காட்டெருமைகள் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரைக்கு வருகின்றன. இவற்றை ஏரியில் படகுப் போக்குவரத்தில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement