“என்னைப்போல எல்லோரும் வாக்களிங்க”- வாக்களித்த பின் 111 வயது மூதாட்டி பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், 111 வயது மூதாட்டி ஒருவர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.


Advertisement

image

டெல்லியில் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரையில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்தது. அதன்படி டெல்லியில் 100 வயதைக் கடந்த 132 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டது.


Advertisement

image

இதன் ஒரு பகுதியாக கலிதாரா மண்டல் என்ற 111 வயது மூதாட்டி ஒருவர் டெல்லியில் உள்ள சி.ஆர் பார்க் என்ற பகுதியில் மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்று வாக்களித்தார். சுதந்திரத்திற்கு முன் தற்போதைய வங்கதேசத்தில் உள்ள பாரிசால் என்ற பகுதியில் 1908-ஆம் ஆண்டு இந்த மூதாட்டி பிறந்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்ததில் பெரு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த கலிதாரா, தன்னைப்போல பிறரும் தவறாமல் ஜனநாயகக் கடமையையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement