[X] Close

கொரோனா வைரஸ் அச்சம்: பணி நிறுத்தத்தை நீட்டித்தது சீன டாடா மோட்டார்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் அச்சத்தினால் சீனாவில் இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர் ஆலையின் பணிநிறுத்தத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் கடுமையான அச்சம் நிலவி வருகிறது. ஆகவே, அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினர் பலரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்த வைரஸ் அச்சம் காரணமாக சீனாவின் பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. சில இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன, நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அந்த வகையில், சீனாவிலுள்ள டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொகுசு கார் பிரிவான ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆட்டோமோட்டிவ் பி.எல்.சி தனது உற்பத்தி பிரிவில் பணி நிறுத்தத்தை அறிவித்து இருந்தது.

image


Advertisement

 

‘எனது போராட்டத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது’ - அன்னா ஹசாரே

இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர் ஆலையின் பணிநிறுத்தத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏதும் வந்துவிடக்கூடாது என்பதனால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் குழுவின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஆக பணியாற்றும் பி.பி. பாலாஜி, ‘தி எகனாமிக் டைம்ஸ்’-க்கு அளித்த பேட்டியில், இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். சீனாவிலுள்ள வுஹானில் இருந்து 800 கி.மீ தூரத்தில் சாங்ஷுவில் உள்ள செரி ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி பிரிவில் பணிநிறுத்தத்தை மேலும் நீட்டிப்பு செய்வதற்கான முடிவை தங்களின் நிறுவனம் அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று கூறினார். அவர் இச்செய்தியை சொன்ன அடுத்த நிமிடமே பரபரப்பானது.


Advertisement

image

இது சம்பந்தமாக பதிலளித்த டாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர், “இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரம் குறித்த கவலை அதிகமாகவுள்ளது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெரும்பாலான மாகாணங்கள் சீன புத்தாண்டையொட்டி விடுமுறைக்கான இடைவெளியை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன. இந்தக் காலகட்டத்தில், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து தங்களின் வேலைகளை செய்வார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஜே.எல்.ஆர், சீனாவின் செரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டு வைத்து இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement