JUST IN

Advertisement

கோலியா? ஸ்மித்தா? யார் சிறந்த பேட்ஸ்மேன்? : சச்சின் அளித்த பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோலியா? ஸ்மித்தா? யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது பற்றி சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

சிறந்த பேட்ஸ்மேன் யார்? ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தா? அல்லது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியா?. இது கிரிக்கெட்டில் உலகில் விடை கண்டுபிடிக்க முடியாமல் கடந்த சில ஆண்டுளாக தொடரும் ஒரு முடிவடையாத விவாதம். ஆகவே, இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பட்டு கொண்டே இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஸ்மித்தை விட கோலியை, அனைத்து ஃபார்மெட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரும்போது அவர்கள் ஸ்மித்தான் சிறந்த வீரர் என்று சொல்லிவிடுகிறார்கள்.

image


Advertisement

இதே கேள்வியைக் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் முன்வைத்த போது அவர், இரண்டு சமகால பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்த்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

தற்சமயம் சிட்னியில் உள்ள டெண்டுல்கர் இதுகுறித்து பேசுகையில், “நாம் ஒப்பீடுகளில் இறங்கக்கூடாது. அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவிப்போம். அவர்கள் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கிறார்கள். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

image


Advertisement

மேலும், இது சம்பந்தமாக தனது கருத்துகளை விளக்க தனது சொந்த அனுபவத்தையும் டெண்டுல்கர் மேற்கோள் காட்டினார். “ஒப்பீடுகளில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. மக்கள் என்னை பல கிரிக்கெட் தோழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் போது ‘எங்களை தனியாக விட்டுவிடுங்கள்’ என்று சொன்னேன்”என்றார்.

சச்சின் விளையாடிய காலங்களில் லாரா, ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் அவர் ஒப்பிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement