JUST IN

Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளைக்கு அனுமதி: பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்‌க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.


Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான ராமர் ஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து என உத்தரவிட்டது. இதற்கான அறக்கட்டளை மூன்று மாதங்களில் ‌அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

image


Advertisement

இந்தநிலையில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாகவும், ‌அந்த அறக்கட்டளைக்கு ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் மக்களவைக்கு ‌வந்த பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement