[X] Close >

ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: 347 ரன்கள் குவித்த இந்தியா!

India-set-New-Zealand-348-to-win

நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 347 ரன்கள் குவித்துள்ளது.


Advertisement

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

image


Advertisement

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் ஏமாற்றம் அளித்தனர். பிருத்வி ஷா 20 ரன்களிலும், மயங்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

விராட் கோலி 51 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 107 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என 103 ரன்கள் எடுத்தார். கேஎல் ராகுல் மற்றும் கேதர் ஜாதவ் ஆட்டமிழக்காத நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 347 ரன்கள் எடுத்தது.

image


Advertisement

நியூசிலாந்தை பொருத்தவரை சவுத்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாட உள்ளது.

தமிழில் ஒலித்த மந்திரம்.. வட்டமிட்ட கருடன்... தஞ்சை கோயில் குடமுழுக்கு கோலாகலம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close