‘நீங்கள் ஒரு பயங்கரவாதி’ - கெஜ்ரிவால் மீது பிரகாஷ் ஜவடேகர் காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.


Advertisement

டெல்லி வாக்காளர்கள் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆகவே டெல்லி தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளும் கட்சி ஆம் ஆத்மியை எதிர்த்து பாஜக களமாடி வருகிறது. இந்நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தொழிலாளர்கள் பலரை தங்களது கட்சியில் இணைக்கும் விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது ஆளும் கட்சியின் முதல்வரான கெஜ்ரிவாலை எதிர்த்து சில கருத்துகளை அவர் தெரிவித்தார்.

image


Advertisement

“ஒரு காலத்தில் கெஜ்ரிவாலுக்கு பின்னால் நின்ற டெல்லி மக்கள் அனைவரும் இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது” என்றார் பிரகாஷ் ஜவடேகர். மேலும் அவர், “கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதியா என்று கேட்கும்போது, ஒரு அப்பாவி முகத்தை காட்டுகிறார். நீங்கள் ஒரு பயங்கரவாதி, அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நீங்கள் ஒரு அராஜகவாதி என்று நீங்களே சொல்லியிருந்தீர்கள். அராஜகவாதிக்கும் பயங்கரவாதிக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை”எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image result for arvind kejriwal

இவரது பேச்சு குறித்து ஆம் ஆத்மி கருத்து கூறியுள்ளது. “ஒரு மத்திய அமைச்சர் இத்தகைய மொழியைப் பயன்படுத்த எப்படி அனுமதிக்க முடியும்? அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்றால், அவரை கைது செய்யும்படி நான் பாஜகவுக்கு சவால் விடுகிறேன்”என்று சட்டசபை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement