விருதுநகர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9 வயது மகள் வசந்த குருலட்சுமி, அதேபகுதியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார் வசந்த குருலட்சுமி. பின்னர் தங்கை மட்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.
நீண்ட நேரம் ஆகியும் வசந்த குருலட்சுமி வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை தேடிப் பார்த்துள்ளனர். கிடைக்கவில்லை என்றதும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் அருகிலிருந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலம் சிவகாசி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்