5 ஆவது போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் : கோலிக்கு ஓய்வு, ரோகித் கேப்டன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Advertisement

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3ஆவது மற்றும் 4ஆவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுன்கவுயி நகரில் இன்று நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளார். கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை.

       image

இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதேவேளையில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடைய நியூசிலாந்து முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement