தோனி எங்களை நடத்தியது போல் ரிஷப்பை நடத்தாதீர்கள் - சேவாக் பளீர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தங்களை மகேந்திர சிங் தோனி நடத்தியது போல், ரிஷப் பண்ட்டை நடத்தினால் அது தவறானது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.


Advertisement

இந்திய அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு விக்கெட் கீப்பராகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ அவர் தன்னுடைய திறமையை இன்னும் முழுமையாக நிரூபிக்கவில்லை. குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் சொதப்பி வருகிறார்.

image


Advertisement

ரிஷப் பண்ட் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடினார். அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுலே விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். ரிஷப் பண்ட்டிற்கு அவரது நிலை குறித்து அணி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை என்றால் அது தவறானது எனக் கூறியுள்ளார். அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

image


Advertisement

சேவாக் பேசியதன் விவரம்:-

விளையாடினால்தானே ரன் அடிக்க முடியும்:

ரிஷப் பண்ட் அணியில் இல்லை என்றால் எப்படி அவர் ரன்களை அடிப்பார். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் பெஞ்சில் உட்கார வைத்தால், ரன் அடிக்க முடியாது. அவர் மேட்ச் வின்னராக இருப்பார் என்றால், ஏன் விளையாட வைக்க வில்லை? ஏனெனில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதில்லை.

விராட் கோலி வீரர்களுடன் பேசுகிறாரா:

எங்களுடைய காலத்தில் கேப்டன் வீரர்களுடன் சென்று கலந்து பேசுவார்கள். தற்போது, விராட் கோலி அப்படி செய்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. நான் அணி நிர்வாகத்தில் இல்லை. ஆனால், ஏசியா கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக சென்ற போது, அவர் அனைத்து வீரர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

            image

வீரர்களுடன் பேசுவது வேறு மீடியாவில் பேசுவது வேறு:

2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது, டாப் மூன்று வீரர்கள் (சேவாக், சச்சின், கம்பீர்) மிகவும் மந்தமாக பீல்டிங் செய்வதாக தோனி தெரிவித்தார். ஆனால், அதுகுறித்து எங்களிடம் அவர் கேட்டதேயில்லை, கலந்து கொண்டதும் இல்லை. மீடியாவில் அவர் பேசிய பிறகுதான் எங்களுக்கே தெரியும். அவர் வீரர்களுடனான கலந்துரையாடலின் போது சொல்லாமல் மீடியாவில் சொன்னார்.

   image

கலந்துரையாடலின் போது, ரோகித் சர்மாவை விளையாட வைக்க வேண்டும் என்பதால் மூவரும் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவார்கள் என்றுதான் தோனி சொன்னார். ஆனால், மீடியாவில் நாங்கள் மந்தமாக பீல்டிங் செய்வதுதான் வீரர்கள் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவதற்கு காரணம் என்றார். ஒருவேளை அதேபோல் தற்போது நடந்து கொண்டிருந்தால் அது தவறு

loading...

Advertisement

Advertisement

Advertisement