ராமநாதபுரம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இடையத்தூர் மேலகுடியிருப்பைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஹேமலதா. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 20 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் இருந்து ஒரு பெண்ணை விடுவிக்க பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராஜன் 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், 5 ஆயிரம் ரூபாய் கேட்டு அவர் வற்புறுத்தவே, பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜராஜனிடம் வழங்கியுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் ராஜராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்