"மிஸ் யூ தோனி"- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரசிகர்கள் பதாகை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


"வி மிஸ் யூ" தோனி என்ற வாசகம் கொண்ட பதாகையை வைத்து இந்திய ரசிகர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


Advertisement

Image

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


Advertisement

Image

4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Image


Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இந்நிலையில் மைதானத்தில் சில ரசிகர்கள் "வி மிஸ் யூ தோனி" என்ற பதாகையை வைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement