கூட்டணி தர்மத்தை மதிக்கிறது தேமுதிக; குட்ட நினைத்தால் குனிய மாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த்

Premalatha-vijayakanth-speech-at-chennai-dmdk-function

தேமுதிக கூட்டணி தர்மத்தை மதித்தாலும், குட்ட நினைக்காதீர்கள் குனிய மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிகவினருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

image


Advertisement

விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாதிரி விஜயகாந்த் இருக்கிறார் என்று தொண்டர்கள் இன்றும் பேசுகின்றனர். விரைவில் விஜயகாந்த் தேர்தலில் பரப்புரை செய்வார். கூட்டணி தர்மத்தை எப்போதும் தேமுதிக மதிக்கிறது. அதில் இருந்து விஜயகாந்த் மாறமாட்டார். கொடுக்கும் வார்த்தை எப்போதும் மாறாது. அதனால் எங்கள் மீது குட்ட நினைக்க கூடாது. அதற்கு குனிய மாட்டோம். தேமுதிக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement